எப்படி இருக்கு 'வலிமை'? ட்விட்டர் விமர்சனம்

வலிமை - அஜித்குமார்
வலிமை - அஜித்குமார்

அஜித்தின் ‘வலிமை’ படம் சிறப்பாக இருப்பதாக, ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டிப் பதிவிட்டு வருகின்றனர்.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம், ’வலிமை’. அஜித் ஜோடியாக ஹூமா குரேஷி நடித்துள்ளார். தெலுங்கு ஹீரோ கார்த்திகேயா வில்லனாக நடித்துள்ளார். போனி கபூர் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்தப் படம், இன்று வெளியாகி இருக்கிறது. பல்வேறு தியேட்டர்களில் அதிகாலையில் சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட்டன. திருவிழாக் கொண்டாட்டம்போல ரசிகர்கள் அந்தக் காட்சிகளைக் காணக் குவிந்தனர்.

இந்நிலையில் படம் பற்றி ட்விட்டரில், ரசிகர்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அதில் பலர், படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளையும் அஜித்தின் நடிப்பையும் பாராட்டி வருகின்றனர்.

‘முதல் பாதி தரமான பிளாக் பஸ்டர். இந்த த்ரில்லரில் ஒரு சலிப்பூட்டும் காட்சி கூட இல்லை. அஜித் மிரட்டலாக மீண்டும் களமிறங்கி இருக்கிறார் என்று ஒரு ரசிகர் தெரிவித்துள்ளார்.

மற்றொருவர், இடைவேளை வரை பார்த்திருக்கிறேன். இதுவரை அருமையாகச் செல்கிறது படம். இயக்குநர் வினோத்தின் டீட்டெய்லிங் அருமை. ஹீரோ, வில்லனுக்கான பூனை- எலி ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் மிரட்டல் என்று குறிப்பிட்டுள்ளார்.

இன்னொரு ரசிகர், அருமையான திரைக்கதை. ஹெச். வினோத் சிறப்பாகச் செதுக்கி இருக்கிறார். சமீபத்தில் இப்படியொரு ஆக்‌ஷன் படம் பார்த்தது இல்லை. ஐந்துக்கு நான்கரை மார்க் கொடுக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

முதல் பாதிவரை படம் பார்த்துள்ள பெரும்பாலான ரசிகர்கள், படத்தைக் கொண்டாடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in