வலிமை: ரிலீஸுக்கு முன்பே ரூ.300 கோடி வியாபாரம்?

வலிமை - அஜித்
வலிமை - அஜித்

அஜித் நடித்துள்ள ’வலிமை’ படம் ரிலீஸுக்கு முன்பே, ரூ.300 கோடி வியாபாரம் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம், ’வலிமை’. இந்த திரைப்படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் போனி கபூர் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்தி நடிகை ஹூமா குரேஸி, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா, சுமித்ரா, யோகிபாபு, ஜி.எம்.குமார் உட்பட பலர் நடித்துள்ளனர். அஜித்குமார் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். கரோனாவால் பலமுறை ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்ட இந்தப் படம், வரும் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பதால், தமிழ்நாட்டில் 90 சதவீத தியேட்டர்களில் இந்தப் படம் வெளியாக இருக்கிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் நேரடியாக வெளியாக இருக்கிறது. இந்நிலையில் ரிலீஸுக்கு முன்பே இந்தப் படம் ரூ.300 கோடி வியாபாரம் ஆகி இருப்பதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in