அடுத்த பொங்கலுக்கு அஜித் - விஜய் மோதல்?

அடுத்த பொங்கலுக்கு அஜித் - விஜய் மோதல்?

போனி கபூர் தயாரிப்பில், வினோத் இயக்கத்தில், அஜித் நடிப்பில் தயாரான 'வலிமை' திரைப்படம், ஆயுத பூஜைக்கு வரும், தீபாவளிக்கு வரும் எனப் பட வெளியீடு பற்றி ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்துவந்தனர். இந்த வருடத் தீபாவளிக்கு ரஜினியின் 'அண்ணாத்த' திரைப்படத்துடன் மோத வேண்டாம் என்று முடிவெடுத்ததால், கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை நாட்களில் 'வலிமை' வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தற்போது 'வலிமை' வெளியீடு பற்றிய தகவலைத் தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார். அதன்படி, ‛‛வலிமை படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகிறது என மகிழ்ச்சி உடன் தெரிவிக்கிறேன்'' என ட்விட்டரில் போனி கபூர் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் தீபாவளி போட்டியில் ஏற்கனவே உள்ள ரஜினியின் அண்ணாத்த, சிம்புவின் மாநாடு படங்கள் உடனான மோதலை தவிர்த்துள்ளனர். அதேசமயம் 2022 பொங்கல் போட்டியில் விஜய்யின் பீஸ்ட் படம் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

விஜய், அஜித் படங்கள் மீண்டும் ஒரு முறை மோதத் தயாராகி வருகின்றன.

இப்போது வசூல் பாதிக்காதா? என்பது மில்லியன் டாலர் கேள்வி

Related Stories

No stories found.