
`துணிவு' படம் வெற்றி பெற வேண்டி அஜித் ரசிகர்கள் பழனிக்கு பாதயாத்திரை கிளம்பி சென்றனர்.
அஜித் நடிப்பில் `துணிவு', விஜய் நடிப்பில் `வாரிசு' ஆகிய இரு திரைப்படங்கள் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளன. இவ்விரண்டு படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆவதால் விஜய், அஜித் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்படங்கள் வெற்றி பெற வேண்டி ரசிகர்கள் பல்வேறு பிரார்த்தனைகள் நிறைவேற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், `துணிவு ' படம் வெற்றி பெற வேண்டி மதுரை மாவட்டம் பரவை அஜித் குமார் ரசிகர் மன்ற நிர்வாகிகள் உள்பட 30 பேர் மாலை அணிந்து பழனிக்கு பாதயாத்திரை கிளம்பினர். பரவை ஏகாம்பரஸ்வரர் கோயில் விநாயகர் சன்னதியில் இருந்து இன்று பாதயாத்திரை புறப்பட்டனர்.