அஜித்
அஜித்

இயக்குநர் வினோத்துக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அஜித்!

’வலிமை’ படத்தை குடும்பத்துடன் பார்த்த நடிகர் அஜித், இயக்குநர் வினோத் வீட்டுக்குச் சென்று ஆச்சரியப்படுத்தி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அஜித் நடித்துள்ள ’வலிமை’ படம் வரும் 24-ம் தேதி ரிலீஸ் ஆகிறது. அஜித் ஜோடியாக ஹூமா குரேஷி நடித்துள்ளார். தெலுங்கு ஹீரோ கார்த்திகேயா வில்லனாக நடித்துள்ளார். ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 'வலிமை' படத்தின் ட்ரெய்லர், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

வினோத், அஜித்
வினோத், அஜித்

இந்நிலையில், ’வலிமை’ படத்தை தனது குடும்பத்துடன் நடிகர் அஜீத் சமீபத்தில் பார்த்துள்ளார். படம் சிறப்பாக வந்திருப்பதால் அந்த மகிழ்ச்சியில், படம் முடிந்ததும் நேராக ஹெச். வினோத் வீட்டுக்கு அஜித் சர்ப்ரைஸ் விசிட் அடித்ததாகவும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த அஜித், சில பரிசுகளைக் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

'வலிமை'யைத் தொடர்ந்து அஜித்தின் அடுத்த படத்தையும் வினோத் இயக்குகிறார். போனி கபூர் தயாரிக்கும் இதன் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்குகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in