`AK62’ படப்பிடிப்பு முடித்து அஜித் வைத்திருக்கும் மெகா பிளான்?

`AK62’ படப்பிடிப்பு முடித்து அஜித் வைத்திருக்கும் மெகா பிளான்?

நடிகர் அஜித் ’AK62’ படப்பிடிப்பு முடித்து விட்டு அடுத்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

’நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ படத்திற்குப் பிறகு ஹெச்.வினோத்- போனிகபூர்- அஜித் மூன்றாவது முறையாக இணையும் கூட்டணி ‘துணிவு’. மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க ஜிப்ரான் படத்திற்கு இசையமைத்துள்ளார். சென்னை, ஹைதராபாத்தில் படப்பிடிப்பு முடித்து இறுதிக் கட்டப்படப்பிடிப்புக்காக படக்குழு கடந்த சில நாட்களுக்கு முன்பு பாங்காங் சென்றது.

தற்போது ‘துணிவு’ படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், பேட்ச் வொர்க் தீவிரமாக நடந்து வருகிறது. அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை ஒட்டி படம் வெளியாக இருக்கிறது. நடிகர் விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படமும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

’துணிவு’ படத்தை அடுத்து நடிகர் அஜித் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் தனது 62-வது படத்திற்காக இணைய இருக்கிறார். இதற்கான அறிவிப்பு ஏற்கெனவே வந்த நிலையில், இதன் படப்பிடிப்பு அடுத்த வருடத்திற்குள் முடித்துவிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறதாம். துப்பாக்கி சுடுதல், பைக் ரேசிங், விமான பயிற்சி, ஃபோட்டோகிராஃபி போன்றவற்றில் ஆர்வம் கொண்டவர் அஜித். ‘துணிவு’ படப்பிடிப்பு ஷெட்யூல் பிரேக்கின் போதே பைக்கில் பயணம் மேற்கொண்டார்.

அந்த வகையில் விக்னேஷ் சிவனுடன் இணையும் படத்தினை முடித்துவிட்டு அண்டார்டிகா உட்பட 62 நாடுகள், 18 மாதங்கள் என சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இவ்வாறு சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பது அஜித்தின் நீண்ட நாள் விருப்பம் என்கிறார்கள் அவரது நெருங்கிய வட்டத்தினர். இதனால், கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு அடுத்து அஜித் எந்தப் படமும் நடிக்க மாட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in