அஜித்தின் மகள் டேட்டிங்கா... இன்ஸ்டா புகைப்படத்தால் எழும் கேள்விகள்

அஜித்தின் மகள் அனோஷ்கா
அஜித்தின் மகள் அனோஷ்கா

தனது இன்ஸ்டாகிராம் பதிவில் Date Night என்று குறிப்பிட்டு நடிகர் அஜித்குமாரின் மகள் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளது நெட்டிசன்கள் மத்தியில் கேள்வியை எழுப்பியுள்ளது.

தமிழ் திரை உலகில் நட்சத்திர ஜோடியாக வலம் வந்த அஜித்குமார்- ஷாலினி ஆகிய இருவரும் கடந்த 2000வது ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு எந்த திரைப்படத்திலும் நடிக்காமல் தனது கணவன் மற்றும் பிள்ளைகளுக்காகவே வாழ்ந்து வருகிறார்.

இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே அஜித் மற்றும் ஷாலினியின் மகளான அனோஷ்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவா இருந்து வருகிறார். குறிப்பாக தனது தாய், தந்தை ஆகிய இருவருடைய புகைப்படங்களை வெளியிட்டு வரும் அனுஷ்கா தற்போது லண்டனில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே, அவர் தற்போது வெளியிட்டுள்ள ஒரு இன்ஸ்டாகிராம் பதிவில் Date Night என்று குறிப்பிட்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஆகவே அஜித்குமார் அவர்களுடைய மகள் டேட்டிங் செய்து வருவதாகவும், அவர் யாருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்பதை தெரிந்து கொள்ள நெட்டிசன்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in