ரசிகர்களுடன் செல்ஃபி: தாஜ்மஹாலில் அஜித்

ரசிகர்களுடன் செல்ஃபி: தாஜ்மஹாலில் அஜித்

அஜித்குமார் நடித்து வரும் 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ரஷ்யாவில் முடிவடைந்தது. நடிப்பு பணி இல்லாத நாட்களில்,பைக் ரேஸ், துப்பாக்கி சுடுதல், போட்டோகிராபி என தன் திறமையைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார் அஜித்.

இந்த நிலையில் டில்லியில் நடைபெறும் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்வதற்காகச் சமீபத்தில் டில்லி சென்றார் அஜித்.

இந்தப் போட்டி நிகழ்வை முடித்துவிட்டு தாஜ்மஹாலைச் சுற்றிப் பார்க்கச் சென்றுள்ளார் அஜித். அங்கே அவரை அடையாளம் கண்டுகொண்ட ஹிந்தி மற்றும் தமிழ் ரசிகர்கள் அவருடன் புகைப்படம் எடுக்கச் சூழ்ந்து கொண்டனர். அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிட, பெரிய அளவில் வைரலாகிவருகிறது.

Related Stories

No stories found.