குடும்பத்துடன் ஒன்றாக துபாய் செல்லும் அஜித், விஜய்: கங்கை அமரன் புதுத்தகவல்

குடும்பத்துடன் ஒன்றாக துபாய் செல்லும் அஜித், விஜய்: கங்கை அமரன் புதுத்தகவல்

நடிகர்கள் அஜித், விஜய் இருவரும் ஒன்றாக இணைந்து குடும்பத்துடன் துபாய்க்கு சுற்றுலா செல்ல உள்ளதாக இசையமைப்பாளர் கங்கை அமரன் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளரிடம் பேசிய கங்கை அமரன், "அஜித், விஜய் இருவரும் ஒன்றாக நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருக்கிறது. அதற்கான கதையை என்னுடைய மகன் ரெடி பண்ணிக் கொண்டிருக்கிறார். எல்லோரும் ஒன்றாகத்தான் இருக்கிறோம். வெளியில் இருந்து தனித்தனியாக தெரிகிறது. விஜய்யும், அஜித்தும் ஒன்றாக இணைந்து குடும்பத்துடன் ஹாலிடேக்கு துபாய் செல்லப்போகிறார்கள். இது யாருக்காவது தெரியுமா? இருவரும் குடும்பத்துடன் அமெரிக்கா போகிறார்கள். யாருக்காவது தெரியுமா? நானே துபாயில் அவர்களுடன் இருந்து ஒன்றாக இருந்திருக்கிறேன். அவர்கள் இருவரும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள். நீங்கள் தான் அடித்துக் கொண்டு இருக்கிறீர்கள்" என்றார்.

சூப்பர் ஸ்டார் பட்டம் விஜய்க்கு கொடுக்க இருப்பதாக கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு பதில் அளித்த கங்கை அமரன், "நான் என்ன சொல்கிறேன் என்றால், சூப்பர் ஸ்டார் பட்டம் வைத்து விட்டார்கள். புரட்சித்தலைவர் இல்லை. நடிகர் திலகமும் இப்போது இல்லை. ஒருவரை புரட்சித்தலைவர் பட்டத்தை எடுத்துக் கொள்ள சொல்லுங்கள். ஒருவரை நடிகர் திலகம் என்ற பட்டத்தை எடுத்துக் கொள்ள சொல்லுங்கள். இருக்கிறவர்களின் பட்டத்தை வாங்கிக் கொள்ள வேண்டாம். இருக்கிறவர்களுக்கு பட்டம் இருக்கிறது. அதை வாங்கிக் கொள்ள வேண்டாம். இருக்கிற சூப்பர் ஸ்டார் பட்டத்தை எதற்கு நீங்கள் திருடி வைத்துக்கொள்ள ஆசைப்படுகிறீர்கள். பட்டத்தால் ஒன்றும் இல்லை. மனிதர்களிடம் தான் இருக்கிறது" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in