
ஓமன், துபாய் என பயணம் மேற்கொண்ட நடிகர் அஜித்குமார் சென்னை திரும்பியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித்குமார் நடிப்பதை தாண்டி பைக் சுற்றுப்பயணம் மற்றும் சாகசங்களை மேற்கொண்டு வருகிறார். பைக் பிரியராக இருக்கும் அஜித் உலக சுற்றுப்பயணம் சென்றார். அண்மையில் இவர் ஓமன் நாட்டில் பைக்கில் செல்லும் வீடியோ வைரலானது. அதோடு, துபாய் சென்று மோகன்லால் மற்றும் சஞ்சய் தத்தை நேரில் சந்தித்தார்.
இந்நிலையில், நடிகர் அஜித், ஓமன் நாட்டில் இருந்து சென்னை திரும்பியுள்ளார். இவர் சென்னை விமான நிலையத்திலிருந்து வெளிவரும் வீடியோ சமூக வலைதளங்களில் வௌியாகி வைரலாகி வருகிறது.