கேரளத்தில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொண்ட அஜித்

கேரளத்தில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொண்ட அஜித்

அஜித் கேரளத்தில் இருக்கும் பாரம்பரிய ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்றதாகவும் அவருடைய அடுத்த படத்திற்காக உடல் எடையை குறைப்பதற்காக இந்த சிகிச்சை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

வலிமையை தொடர்ந்து அஜித்தை வைத்து அடுத்தப் படத்தை ஹெச்.வினோத் இயக்க இருக்கிறார். இந்தப் படத்தையும் போனி கபூரே தயாரிக்கிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் முதல் வாரம் தொடங்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் அஜித். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.

அஜித் எழுதிய கடிதம்
அஜித் எழுதிய கடிதம்

இந்த நிலையில், வெள்ளை தாடி, கண்ணாடியுடன் வேற மாதிரி கெட்டப்பில் இருக்கும் நடிகர் அஜித், கேரளம் சென்றுள்ளார். அங்கு குருவாயூர் கோயிலில் வழிபட்டுள்ளார். வெள்ளை வேஷ்டி மற்றும் துண்டுடன் அஜித் வழிபடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

இந்தநிலையில், அஜித் கேரளத்தில் இருக்கும் பாரம்பரிய ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்றதாகவும் அவருடைய அடுத்த படத்திற்காக உடல் எடையை குறைப்பதற்காக இந்த சிகிச்சை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தற்போது, கேரளாவில் தனக்கு ஆயுர்வேத சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்து அஜித் எழுதிய கடிதம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.