போனிகபூர் வெளியிட்ட அஜித்தின் ரகளை லுக்!

அஜித்தின் ரகளை லுக்
அஜித்தின் ரகளை லுக்

தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டுள்ள அஜித்குமாரின் ஏகே 61 படத்துக்கான லுக், சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

அஜித் நடித்துள்ள திரைப்படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்துள்ள இந்தப் படத்தில் ஹுமா குரேஷி, கார்த்திகேயா, சுமித்ரா, ராஜ் ஐயப்பா உட்பட பலர் நடித்துள்ளனர். நேர்கொண்ட பார்வையை அடுத்து இந்தப் படத்தையும் ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படம், வரும் 24-ம் தேதி ரிலீசாக உள்ளது.

அஜித்
அஜித்

’வலிமை’யைத் தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கிறார் அஜித். போனிகபூர் - ஹெச்.வினோத்- அஜித் மூன்றாவது முறையாக இணையும் இந்தப் படத்துக்கு ‘ஏகே 61’ என தற்காலிகத் தலைப்பு வைத்துள்ளனர். இந்தப் படத்தின் ஷூட்டிங் மார்ச் மாதம் தொடங்க இருக்கிறது. இதில் அஜித் ஜோடியாக, தபு நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதில் கொஞ்சம் வில்லத்தனமான கேரக்டரில் அஜித் நடிக்கிறார். இந்தப் படத்தின் தயாரிப்பு பணிகளில் படக்குழு மும்முரமாக இருக்கிறது. வெள்ளைத்தாடியுடன் அஜித் இருக்கும் இந்தப் படத்தின் லுக் சமூக வலைதளத்தில் கசிந்த நிலையில், புதிய போஸ்டரை, போனி கபூர் வெளியிட்டுள்ளார். அந்தப் போஸ்டரில் படத்தின் தயாரிப்பு வேலைகள் தொடங்கிவிட்டன என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அஜித்தின் இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in