கால்பந்தில் கலக்கும் அஜித் மகன்... வைரல் புகைப்படங்கள்!

அஜித் மகன்
அஜித் மகன்

நடிகர் அஜித்குமாரின் மகன் ஆத்விக் கால்பந்து போட்டியில் பதக்கம் வென்றுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அஜித் மகன் ஆத்விக்கை ‘குட்டி தல’ என்று அவரின் ரசிகர்கள் அழைக்கின்றனர். என்று தற்போது ஆத்விக்கிற்கு 8 வயதாகும் நிலையில், அவரின் க்யூட் புகைப்படங்கள் அடிக்கடி இணையத்தில் வைரலாகும். அந்தவகையில், இப்பொது ஆத்விக் கால்பந்து விளையாடுவது போன்ற புகைப்படங்களை அஜித் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

நடிகர் அஜித்குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் தனது அடுத்த படமான ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பிற்காக அஜர்பைஜானில் இருக்கிறார். இதற்கிடையில், அவரது மகன் ஆத்விக் அஜித் கால்பந்து விளையாட்டு போட்டியில் கோல்ட் மெடலை வென்றுள்ளார்.

அஜித்-ஷாலினியின் மகன் ஆத்விக் தனது சிறு வயதிலிருந்தே கால்பந்து விளையாட்டில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில், அவர் எதிர்காலத்தில் சாம்பியனாக வருவார் என அஜித் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in