'தல' நண்பர் நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி காலமானார்

எஸ்.எஸ்.சக்கரவர்த்தி
எஸ்.எஸ்.சக்கரவர்த்தி'தல' நண்பர் நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி காலமானார்
Updated on
1 min read

நடிகர் அஜித் நடித்த 9 படங்களைத் தயாரித்த அவரது நண்பரும், நிக் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளருமான எஸ்.எஸ்.சக்கரவர்த்தி உடல்நலக்குறைவால் காரணமாக காலமானார்.

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களில் முக்கியமானவர் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி. இவர் தனது நிக் ஆர்ட்ஸ் மூலமாக நடிகர் அஜித் நடித்த 'ராசி', 'முகவரி', 'சிட்டிசன்', 'ரெட்', 'வில்லன்', 'ஆஞ்சநேயா', 'ஜி', 'வரலாறு' உள்ளிட்ட 9 படங்களைத் தயாரித்துள்ளார். அஜித்தின் ஆரம்ப கால நண்பர்களில் மிக முக்கியமானவரான இவர், இதன் பின் விக்ரம் நடித்த 'காதல் சடுகுடு', சிம்பு நடித்த 'காளை', 'வாலு' ஆகிய படங்களைத் தயாரித்தார். நடிகர் அஜித்திற்கும், இவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.

இந்த நிலையில், தனது மகன் ஜான் கதாநாயகனாக நடித்த 'ரேணிகுண்டா' படத்தை சக்கரவர்த்தி தயாரித்தார். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் தனது மகனை வைத்து '18 வயது' என்ற படத்தை தயாரித்தார். இப்படம் வெற்றி பெறவில்லை. நடிகர் சிம்பு நடித்த 'வேட்டைமன்னன்' படம் நிதிசிக்கல் காரணமாக முடங்கியது. இதனால் சினிமாவில் இருந்து எஸ்.எஸ்.சக்கரவர்த்தி சில காலம் விலகியிருந்தார்.

இந்த நிலையில் நடிகர் விமல் நடித்த 'விலங்கு' இணையத்தொடரில் காவல்துறை அதிகாரியாக எஸ்.எஸ்.சக்கரவர்த்தி நடித்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சக்கரவர்த்தி கடந்த 8 மாதங்களாக அதற்கு சிகிச்சை எடுத்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று நள்ளிரவு அவர் உயிரிழந்தார். அவரின் உடல் இன்று மாலை அடக்கம் செய்யப்பட உள்ளது. அவரது மறைவுக்கு திரைத்துறையினர் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in