எடையை குறைத்து செம ஸ்லிம் அஜித்: வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்!

எடையை குறைத்து செம ஸ்லிம் அஜித்: வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்!

நடிகர் அஜித்குமார் ஸ்லிம்மாக உடலைக் குறைத்துள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

’வலிமை’ படத்தை அடுத்து ஹெச்.வினோத் இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறார் அஜித்குமார். நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்குப் பிறகு வினோத், அஜித் இணையும் மூன்றாவது படம் இது. போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. AK 61 என்று தற்காலிக டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்துக்காக, அங்கு பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு ஷூட்டிங் நடந்து வருகிறது.

ரசிகர் ஒருவருடன் செம ஸ்லிம் அஜித்குமார்
ரசிகர் ஒருவருடன் செம ஸ்லிம் அஜித்குமார்

இந்தப் படத்தில் வில்லனாகவும் ஹீரோவாகவும் அவர் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்துக்கான அஜித்தின் புகைப்படத்தைத் தயாரிப்பாளார் போனி கபூர் வெளியிட்டிருந்தார். அதில் வெள்ளை தாடியுடனும் காதில் கடுக்கனுடனும் ஸ்டைலாக இருந்தார் அஜித். இந்நிலையில், உடலை கணிசமாகக் குறைத்து ஸ்லிம்மான அஜித்குமாரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

இந்தப் படத்தை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் அஜித்குமார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in