ரூ.165 கோடி ஒப்பந்தம்... இந்திய ராணுவத்துடன் இணைகிறார் நடிகர் அஜித்!

ரூ.165 கோடி ஒப்பந்தம்... இந்திய ராணுவத்துடன் இணைகிறார் நடிகர் அஜித்!

நடிகர் அஜித்குமார் வழிகாட்டுதலுடன் நடத்தப்பட்டு வரும் தக்க்ஷா குழுவினருக்கு இந்திய ராணுவம் 165 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 200 டிரோன்களை தயாரிக்கும் ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது. அஜித் மற்றும் குழுவினரின் இந்த சாதனைக்கு பலரும் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் அஜித்குமார், இந்தியாவில் விமானிகளுக்கான லைசென்ஸ் பெற்றுள்ள வெகுசில நடிகர்களில் ஒருவர்.

நடிகர் அஜித்குமார் ஆட்டோமொபைல் போல ஏரோநாட்டிக்ஸ் துறையிலும் அதிக ஆர்வமுடன் செயல்படுபவர். சென்னை எம்ஐடி-யைச் சேர்ந்த மாணவர்கள் குழு இவர் தலைமையில் ஆலோசனை பெறப்பட்டு டீம் தக்க்ஷா என்ற பெயரில் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் இணைந்து பறக்கும் டிரோன்களை உருவாக்கும் முயற்சியில் இறங்கினர்.

நடிகர் அஜித், தக்‌ஷா குழு
நடிகர் அஜித், தக்‌ஷா குழு

கடந்த கொரோனா காலகட்டத்தில் கூட இவர்கள் உருவாக்கிய டிரோன்கள் அரசுக்கு பல இடங்களை சானிடைஸ் செய்வதற்கும், மழைக்காலத்தில் பெருவெள்ளத்தில் சிக்கிக் கொண்டவர்களை மீட்பதற்கும், பல இடங்களைக் கண்காணிக்கவும் உதவியது. அதற்கு முன் நடிகர் அஜித்குமாரின் ஆலோசனைப்படி இந்த தக்ஷா குழுவினர் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று புதிய உச்சங்களை பெற்றனர்.

இந்நிலையில் இவர்கள் தொடர்ந்து டிரோன்களை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில் இந்திய ராணுவத்திற்காக 200 டிரோன்களை தயாரிக்க இந்த குழுவிற்கு ஆர்டர் வந்துள்ளது. இதற்காக ரூபாய் 165 கோடியை ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்த குழுவினர் அடுத்த சில மாதங்களில் இந்திய ராணுவத்திற்காக 200 டிரோன்களை தயாரித்து டெலிவரி செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டிரோன்கள் இந்திய எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு பணிக்காகவும், மருத்துவ மற்றும் அவசர பொருட்களை கொண்டு செல்லும் பணிக்காகவும் பயன்படுத்தப்படலாம் என தெரிகிறது.

நடிகர் அஜித் மற்றும் அவரது குழுவினரின் திறமைக்கு இந்திய அரசாங்கம் வழங்கியுள்ள அங்கீகாரமாக இந்த ஒப்பந்தம் பார்க்கப்படுகிறது

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in