வேற மாதிரி கெட்டப்... வைரலாகும் அஜித்தின் புகைப்படங்கள்

கேரள கோயிலில் அஜித்
கேரள கோயிலில் அஜித்

நடிகர் அஜித்குமார் கேரளாவில் உள்ள கோயில் ஒன்றில் வழிபடும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

நடிகர், அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. ஹெச்.வினோத் இயக்கி இருந்த இந்தப் படத்தில் ஹூமா குரேஸி நாயகியாக நடித்திருந்தார். போனி கபூர் தயாரித்த இந்தப் படம் 200 கோடியை தாண்டி வசூல் செய்ததாக செய்திகள் வெளியாயின.

இந்தப் படத்தையடுத்து அவர் நடிக்க இருக்கும் அடுத்தப் படத்தையும் ஹெச்.வினோத் இயக்க இருக்கிறார். இந்தப் படத்தையும் போனி கபூரே தயாரிக்கிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் முதல் வாரம் தொடங்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார், அஜித். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.

இந்த நிலையில், வினோத் இயக்கும் படத்திற்காக, வெள்ளை தாடி, கண்ணாடியுடன் வேற மாதிரி கெட்டப்பில் இருக்கும் நடிகர் அஜித், கேரளா சென்றுள்ளார். அங்கு குருவாயூர் கோயிலில் வழிபட்டுள்ளார். வெள்ளை வேஷ்டி மற்றும் துண்டுடன் அஜித் வழிபடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மேலும் சில கோயில்களுக்கும் அவர் சென்று வழிபட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in