நடிகர் அஜித் ஜோடி இவர்தானா?

நடிகர் அஜித் ஜோடி இவர்தானா?

அஜித் ஜோடியாக. பிரபல நடிகை நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நடிகர் அஜித்குமார் ‘நேர்கொண்ட பார்வை’, ’வலிமை’ படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக ஹெச்.வினோத் இயக்கும் படத்தில் நடிக்கிறார். போனி கபூர் தயாரிக்கிறார். இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். ஜிப்ரான் இசை அமைக்கிறார். சுப்ரீம் சுந்தர் சண்டைக் காட்சிகள் அமைக்கிறார்.

வங்கியில் நடக்கும் கொள்ளை பற்றிய படம் இது. இதில் அஜித் இரண்டு வேடங்களில் நடிக்க இருப்பதாகவும் ஒரு கேரக்டர் வில்லன் கேரக்டர் என்றும் கூறப்படுகிறது.

ரகுல் ப்ரீத் சிங்
ரகுல் ப்ரீத் சிங்

இந்தப் படத்திற்காக ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம்சிட்டியில் மவுன்ட் ரோடு செட் ஒன்றும் பிரம்மாண்டமான வங்கி செட் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு இதன் ஷூட்டிங் நடந்து வருகிறது.

நடிகை தபு ஹீரோயினாக நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், அவர் நடிக்கவில்லை. தென்னிந்திய நடிகை ஒருவர்தான் நாயகி என்று படக்குழு கூறியிருந்தது. இந்நிலையில், அஜித் ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in