கேரவனிலிருந்து வெளியில் வந்த அஜித்... ஆரவாரம் செய்த ரசிகர்கள்: ‘துணிவு’ படத்தின் அப்டேட்

கேரவனிலிருந்து வெளியில் வந்த அஜித்... ஆரவாரம் செய்த ரசிகர்கள்: ‘துணிவு’ படத்தின் அப்டேட்

சென்னையில் நடந்த ‘துணிவு’ படப்பிடிப்பின்போது கேரவனில் இருந்து வெளியில் வந்த அஜித் குமார், ரசிகர்களை நோக்கி கையசைத்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிக்கும் ‘துணிவு’ திரைப்படத்தில் அஜித் குமார் நடித்து வருகிறார். சென்னை, விசாகப்பட்டினம், தாய்லாந்து ஆகிய இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்திட்ட முடிவடைந்துவிட்டது. இந்த நிலையில் எஞ்சிய சில காட்கள் சென்னை இவிஎம் பிலிம் சிட்டியில் படமாக்கப்பட்டது. இப்படத்தின் போஸ்ட் புரோடக்ஸன் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது.

இவிஎம் பிலிம் சிட்டியில் படப்பிடிப்புக்காக அஜித் வந்திருப்பதை அறிந்த ரசிகர்கள் அப்பகுதியில் குவிந்தனர். ஒரு கட்டத்தில் ரசிகர்களின் ஆரவாரம் அதிகமாகவே, அஜித் குமார் கேரவனிலிருந்து வெளியில் வந்து ரசிகர்களுக்கு தம்ஸ்-அப் காட்டினார். இந்த வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதேபோல மற்றொரு வீடியோவில், அஜித் கேரவனிலிருந்து வெளியில் வந்து தம்ஸ் அப் காட்டிவிட்டு வணக்கம் தெரிவித்து செல்கிறார்.

அஜித் குமார் மற்றும் மஞ்சுவாரியர் நடிக்கும் ‘துணிவு’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவுள்ளது. இப்படத்துடன் விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ திரைப்படமும் பொங்கல் ரேஸில் களமிறங்கவுள்ளதால் இப்போதே இப்படத்தின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in