30 நொடி விரல் அசைவிற்காக காத்திருக்கின்றோம்: மதுரையை அதிரவைக்கும் ‘மனித கடவுள் அஜித் பக்தர்கள்’

30 நொடி விரல் அசைவிற்காக காத்திருக்கின்றோம்:  மதுரையை அதிரவைக்கும்  ‘மனித கடவுள் அஜித் பக்தர்கள்’

தமிழ்த் திரைப்பட நடிகர் அஜித்தின் 30 ஆண்டுகால சினிமா பயணத்தை ஒட்டி, மதுரையில் அவரது ரசிகர்கள் சுவரொட்டிகள் மூலமாக அமர்க்களப்படுத்தி வருகிறார்கள்.

அஜித்தை வாழ்த்தி ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், 30 வருட சினிமா பயணம் வெற்றி தல, ஏகே. ‘அரசியல் கட்சிகளின் கொடிகளின் வண்ணத்தில்’ 30 நொடி விரல் அசைவிற்காக காத்திருக்கின்றோம் தல AK என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

மேலும், அந்த சுவரொட்டியில் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தின் படம் மற்றும் அஜித் குமார் படங்களுடன் 'மனித கடவுள் அஜித் பக்தர்கள்' என குறிப்பிட்டு மதுரை முழுவதும் ஒட்டி உள்ளனர்.

இந்த போஸ்டர் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in