ஸ்டைலான தாடி - கெத்தான லுக்: ஹெலிகாப்டரில் மாஸாக பறக்கும் அஜித்குமார்!

ஸ்டைலான தாடி - கெத்தான லுக்: ஹெலிகாப்டரில் மாஸாக பறக்கும் அஜித்குமார்!

அஜித்குமார் ஹெலிகாப்டரில் அவசரமாக ஏறும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

நடிகர் அஜித்குமார் தற்போது இமயமலையின் லடாக், மணாலி உள்ளிட்ட பகுதிகளில் பைக்கில் வலம் வந்துகொண்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் அவ்வப்போது வெளிவந்து வைரலாகி வருகின்றன. இவரின் பைக் பயணத்தில் நடிகை மஞ்சு வாரியரும் இணைந்துள்ளார். அஜித் மற்றும் மஞ்சு வாரியர் பயணக்குழுவுடன் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.

தற்போது அஜித் அவசரமாக ஹெலிகாப்டரில் ஏறும் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. மேலும் அவர் ஹெலிகாப்டருக்கு வெளியில் நின்றவாறும், உள்ளே அமர்ந்தவாறும் எடுத்த புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.

அஜித்குமார் இப்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத ‘ஏகே 61’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை போனிகபூர் தயாரித்து வருகிறார். அஜித் - வினோத் - போனிகபூர் கூட்டணியில் ஏற்கெனவே ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ ஆகிய படங்கள் வெளியாகியுள்ளது. ‘ஏகே 61’ படத்தில் நடிகை மஞ்சு வாரியரும் நடிக்கிறார். சென்னை, விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு பாங்காங்கில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இடைவெளியில்தான் அஜித் இமயமலை பகுதிகளில் ஜாலியாக பைக், ஹெலிகாப்டர் ட்ரிப் சென்றுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in