அஜித் படத்தை இயக்குகிறார் விக்னேஷ் சிவன்

லைகா நிறுவனம் அறிவிப்பு
அஜித் படத்தை இயக்குகிறார் விக்னேஷ் சிவன்

அஜித்தின் அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார். இதனை லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அஜித் நடித்த `வலிமை' படம் கடந்த மாதம் 24-ம் தேதி வெளியானது. போனி கபூர் தயாரித்திருந்த இந்தப் படத்தை, ஹெச்.வினோத் இயக்கி இருந்தார். இந்தி நடிகை ஹூமா குரேஷி நாயகியாக நடித்திருந்தார். கார்த்திகேயா, சுமித்ரா உட்பட பலர் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார்.

இதை அடுத்தும் அஜித் ஹீரோவாக நடிக்கும் படத்தை ஹெச். வினோத் இயக்குகிறார். இந்தப் படத்தையும் போனி கபூர் தயாரிக்கிறார். இதன் ஷூட்டிங் ஐதராபாத்தில் விரைவில் தொடங்குகிறது. இந்தப் படம் முடிந்ததும் அஜித்தின் 62-வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியானது.

இதனை தற்போது லைகா நிறுவனம் உறுதி செய்துள்ளது. அனிரூத் இசையமைக்கிறார். மற்ற நடிகர்களின் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தை சுபாஸ்கரன் தயாரிக்கிறார். படத்தின் ஷூட்டிங் இந்தாண்டு இறுதியில் நடைபெறும் என்றும் அடுத்த ஆண்டு மத்தியில் படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in