
நடிகர் அஜித்குமாரின் வீட்டு சுற்றுச்சுவரை சாலை விரிவாக்க பணிகளுக்காக மாநகராட்சி அதிகாரிகள் இடித்துள்ளதாக விளக்கம் அளித்துள்ளனர்.
தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக விளங்கிவரும் அஜித்குமார், சென்னை ஈஞ்சம்பாக்கம் பகுதியில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரது வீடு அமைந்துள்ள பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மழை நீர் செல்வதற்காக சாலை விரிவாக்க பணிகள் மற்றும் வடிகால் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள பலரது வீட்டு சுற்றுச்சுவர்கள் இடிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நடிகர் அஜித்குமாரின் வீட்டின் சுற்றுச்சுவரின் ஒரு பகுதியும் இயந்திரத்தின் மூலம் அதிகாரிகளால் இடிக்கப்பட்டுள்ளது.
நடிகர் அஜித்குமாரின் வீட்டிற்கு வெளியில் பெரிய அளவில் பள்ளம் தோண்டப்பட்டு இருப்பதால், வீட்டில் இருப்பவர்கள் வெளியே சென்று வர தற்காலிகமாக பாலம் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருவதாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
நடிப்பு மட்டுமின்றி பைக் ரேசிங், துப்பாக்கிச் சுடுதல் மற்றும் ட்ரோன்கள் ஆய்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் ஈடுபட்டு வரும் நடிகர் அஜித்குமார், தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில், விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
உஷார்... தமிழகத்தில் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!
பிரபல கால்பந்து ஜாம்பவான் ராபர்ட் சார்ல்டன் காலமானார்! ரசிகர்கள் இரங்கல்!
பரபரப்பு… அதிமுக கவுன்சிலர் வெட்டிக்கொலை!
அதிர்ச்சி... புழல் சிறையில் பெண் கைதி தூக்கிட்டு தற்கொலை!
அரையிறுதியில் இந்தியா அதிர்ச்சி தோல்வி... வாக்குவாதத்தால் பரபரப்பு!