`அரசியலில் ஈடுபடும் எண்ணம் அஜித்துக்கு இல்லை'

மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கம்
`அரசியலில் ஈடுபடும் எண்ணம் அஜித்துக்கு இல்லை'

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24ம் தேதி நடிகர் அஜித்குமார் நடித்த `வலிமை' திரைப்படம் வெளியானது. இந்நிலையில், ஜெயலலிதாவிடம் உதவியாளராக பணிபுரிந்த பூங்குன்றன் சங்கரலிங்கம் எனது சமூகவலைதள பக்கத்தில், புரட்சித்தலைவியின் மீது அதீத அன்பும், மரியாதையும் கொண்ட அஜித் அரசியலுக்கு வருவதற்கு தன்னை ஆயத்தம் செய்து கொள்கிறார் என்றே நினைக்கத் தோன்றுகிறது என்றும் அம்மாவின் தொண்டர்களை அரவணைக்க விரும்புகிறாரா, அம்மாவின் கம்பீரம் படத்தின் பெயரில் இருக்கிறது என்றும் அஜித் அரசியலில் அடியெடுத்து வைக்கப் போகிறாரா என்றும் இருந்தாலும் எங்களின் திருநாளான தாயின் பிறந்தநாளில் வெளிவரும் சகோதரர் அஜித்தின் 'வலிமை' திரைப்படம் மகத்தான வெற்றி பெற என் இதயமார்ந்த வாழ்த்துகள்' என்று கூறியிருந்தார். இந்த பதிவை வைத்து செய்திகள் வெளியிடப்பட்டிருந்தது.

இந்த செய்தியை அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா மறுத்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பதிவில், "அஜித் குமாருக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை. எனவே இதுபோன்ற தவறான தகவல்களை ஊக்குவிப்பதைத் தவிர்க்குமாறு மதிப்பிற்குரிய ஊடகவியலாளர்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in