கோவை; அஜித் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு!

அஜித் ரசிகர்களின் போஸ்டர்
அஜித் ரசிகர்களின் போஸ்டர்

விஜய் ரசிகர்களுக்கு போட்டியாக அஜித் ரசிகர்களும் போஸ்டர் கலாச்சாரத்தில் குதித்துள்ளனர்.

சமீபத்தில் நடிகர் விஜயின் ‘லியோ’ படத்தின் டிரெய்லர் வெளியானது. இதனை அடுத்து நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தும், அவரை அரசியலுக்கு வரச்சொல்லியும் மதுரை, கோவையில் விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியிருந்தனர்.

இதுமட்டுமல்லாது, நடிகர் விஜயை காமராஜர், எம்.ஜி.ஆர். போன்றோருடன் ஒப்பிட்டு அவர்கள் அடித்திருந்த போஸ்டரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், விஜய் ரசிகர்களுக்கு போட்டியாக அஜித் ரசிகர்களும் இந்த போஸ்டர் கலாச்சாரத்தில் குதித்துள்ளனர்.

அஜித்தின் ‘விடாமுயற்சி’
அஜித்தின் ‘விடாமுயற்சி’

நடிகர் அஜித் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. நீண்ட நாட்களாக இப்படத்தின் அப்டேட் கேட்டு வந்த அஜித் ரசிகர்களுக்கு தற்போது படப்பிடிப்பு அஜர்பைஜானில் தொடங்கியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ர் அஜித்தின் ரசிகரான ரெட்.கே.பிரித்தன் என்பவரின் RKP அஜித்குமார் வெல்ஃபேர் அசோசியேசன் சார்பில் கோவை மாநகரில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில் ’அஜித் சார், உங்கள் வருகையும் சரி... எங்கள் கொண்டாட்டமும் சரி... சற்று தள்ளி போகலாம்! ஆனால் ஒரு போதும் குறையாது... விடாமுயற்சி வருக வெல்க...’ என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in