#AK63 அஜித்தின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார்?

விஷ்ணு வர்தன் - அஜித் குமார்
விஷ்ணு வர்தன் - அஜித் குமார்

அஜித்தின் அடுத்த திரைப்படத்தை இயக்கப்போகும் இயக்குநர் யார் என்ற விவாதம் அஜித் குமார் ரசிகர்கள் மத்தியில் சூடு பறந்து வருகிறது.

அஜித் நடித்து பொங்கலுக்கு வெளியான துணிவு திரைப்படம், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தின் உள்ளடக்கம் மற்றும் வசூல் என இரண்டிலும் துணிவு திருப்தி செய்ததில் அஜித் ரசிகர்கள் உற்காசத்தில் திளைத்து வருகிறார்கள்.

துணிவு வெளியிட்டுக்கு முன்னரே அஜித்தின் அடுத்த திரைப்படமான ஏகே62 குறித்தான தகவல் உறுதியானது. விக்னேஷ் சிவன் இயக்க லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ள, பெயரிடப்படாத அந்த திரைப்படத்தின் படப்பிடிவுப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. திரைப்படத்தில் அஜித் உடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சந்தானம் நடிப்பதும் உறுதியாகி உள்ளது.

இதனிடையே அதற்கடுத்த திரைப்படமான ஏகே63 தொடர்பாக அஜித் ரசிகர்கள் உற்சாக களேபரம் செய்து வருகின்றனர். அட்லீ இயக்குவதாக காலையில் வெளியான அந்த தகவல், மாலையில் இயக்கம் விஷ்ணுவர்தன் என நிற்கிறது. இதற்கிடையே, புஷ்பா இயக்குநர் சுகுமார், சிறுத்தை சிவா உள்ளிட்ட இயக்குநர்கள் பெயரும் அடிபட்டு வருகிறது.

விக்னேஷ் சிவன் இயக்கும் அஜித்தின் அடுத்த திரைப்படம் தொடங்கப்பட உள்ள நிலையில், அதற்கடுத்த திரைப்படத்துக்கான விவாதங்கள் தொடங்கியிருப்பது உண்மையே! ஆனால் அதன் இயக்குநர் குறித்தான அதிகாரபூர்வ தகவல் ஏதும் வெளியாகாத நிலையில், ரசிகர்களாக தங்களது ஏகோபித்த வரவேற்புக்கு உரிய இயக்குநர்களை பரிந்துரை செய்து வருகின்றனர். துணிவு வெற்றி குதூகலத்தில் இருக்கும் அவர்கள், அந்த கொண்டாட்டத்தின் அங்கமாகவும் இதில் ஈடுபட்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in