வெளிநாட்டு சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த அஜித் கட்அவுட்: எந்த நாடு தெரியுமா?

வெளிநாட்டு சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த அஜித் கட்அவுட்: எந்த நாடு தெரியுமா?

`துணிவு' படத்திற்காக வைக்கப்பட்டிருந்த நடிகர் அஜித்தின் பிரம்மாண்ட கட்அவுட் வெளிநாட்டு சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள `துணிவு' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருக்கிறது. மேலும் அதற்கு போட்டியாக நடிகர் விஜய் நடித்த `வாரிசு' படமும் வெளியாகி இரண்டு ரசிகர்களுக்கும் இடையே குஷியை ஏற்படுத்தி இருக்கிறது. ஒருவருக்கொருவர் போட்டிப்போட்டுக் கொண்டு பேனர்களை வைத்து வருகின்றனர். சென்னையில் ராகினி தியேட்டரில் நடந்த கொண்டாட்டத்தில் பாபு என்ற ரசிகர் லாரியிலிருந்து குதித்தபோது முதுகுத்தண்டு உடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சோக சம்பவம் நடந்த பிறகும் ரசிகர்கள் விபரீதமான கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மலேசியாவில் `துணிவு' படத்துக்காக வைக்கப்பட்டுள்ள அஜித் கட் அவுட் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இது அவரது ரசிகர்களின் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மலேசியா தலைநகர், கோலாலம்பூரில் உள்ள எல்எஃப்எஸ் தியேட்டர் ஒன்றில் நடிகர் அஜித் நடித்துள்ள `துணிவு' படம் வெளியாகியுள்ளது. இதையொட்டி அந்த தியேட்டர் முன்பு நடிகர் அஜித்தின் பிரம்மாண்ட கட்அவுட் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. 30 அடி உயரம் கொண்ட அந்த கட்அவுட் தற்போது மலேசியா சாதனை புத்தகத்தில் இடம் பெற்று இருக்கிறது. இதற்கான அங்கீகார சான்றிதழை அந்த படத்தின் விநியோகஸ்தர் ததுக் அப்துல் மாலிக் பெற்றுக்கொண்டார். வெளிநாட்டில் அஜித் கட்அவுட்டுக்கு அங்கீகாரம் கிடைத்திருப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in