டப்பிங்கை முடித்தார் அஜித் - பொங்கல் ரேஸில் முந்தும் ‘துணிவு’

டப்பிங்கை முடித்தார் அஜித் - பொங்கல் ரேஸில் முந்தும் ‘துணிவு’

‘துணிவு’ திரைப்படத்தின் டப்பிங் பணிகளை நடிகர் அஜித்குமார் நிறைவு செய்துள்ளார்.

போனி கபூர் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் 'துணிவு', இப்படத்தின் டப்பிங் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. படத்தில் நாயகியாக நடித்துள்ள மஞ்சு வாரியர் கடந்த வாரம் தனது டப்பிங்கை நிறைவு செய்தார். இந்த நிலையில் அஜித்குமார் இன்று தனது டப்பிங் பணிகளை நிறைவுசெய்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

‘துணிவு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், விசாகப்பட்டினம், பாங்காங் உள்ளிட்ட இடங்களில் நடந்தது. இப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்த நிலையில், பொங்கல் ரிலீஸிற்காக தற்போது போஸ்ட் ப்ரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடிகர் விஜயின் ‘வாரிசு’ திரைப்படமும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருப்பதால் இப்போதே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ படத்திற்குப் பிறகு ஹெச்.வினோத்- போனிகபூர்- அஜித் மூன்றாவது முறையாக இணையும் கூட்டணி ‘துணிவு’. மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in