`துணிவு’ படத்திற்குப் பிறகு கெட்டப் மாறிய அஜித்: வைரலாகும் மாஸ் புகைப்படம்!

`துணிவு’ படத்திற்குப் பிறகு கெட்டப் மாறிய அஜித்: வைரலாகும் மாஸ் புகைப்படம்!

நடிகர் அஜித் புதிய கெட்டப்பிற்கு மாறியுள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

’துணிவு’ படத்திற்குப் பிறகு கெட்டப் மாறிய நடிகர் அஜித்தின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. ஹெச். வினோத் இயக்கத்தில் 'துணிவு’ திரைப்படம் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. சமீபத்தில் நடிகர் அஜித், மஞ்சுவாரியர் ஆகியோர் டப்பிங் பேசிக்கொண்டிருக்கும்படியான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.

இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். படத்தின் முதல் பாடலை அனிருத் பாடியுள்ளார். இந்தப் படம் பொங்கலை ஒட்டி வெளியாகிறது. போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடந்து கொண்டிருந்த அதே நேரம் படப்பிடிப்பிற்கான பேட்ச் வொர்க்கும் போய்க் கொண்டிருந்தது. இந்தப் படத்திற்காக நடிகர் அஜித்குமார், நீண்ட தாடியுடன் காணப்பட்டார். படப்பிடிப்பு முடிந்ததும் தற்போது, க்ளீன் ஷேவ் செய்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in