`அன்பு'க்காக காத்திருக்கிறாரா அஜித்?

`அன்பு'க்காக காத்திருக்கிறாரா அஜித்?

அஜித்தின் பெயரிடப்படாத 'அஜித் 61' படத்தின் படப்பிடிப்பு வைசாக்கில் நடைபெற்றது. அப்பகுதியில் படப்பிடிப்பு முடிவுற்ற நிலையில், ஒடிசாவில்  படப்பிடிப்பை தொடர்ந்திருக்கிறார்கள். என்ன காரணமோ தெரியவில்லை திடீரென படப்பிடிப்பை நிறுத்திவிட்டார்கள். இதையே காரணம் காட்டி லடாக், இமயமலை என பைக்கில் ஜாலி ட்ரிப் அடிக்க தொடங்கிவிட்டார் அஜித். படப்பிடிப்பில் கவனம் செலுத்தும் அஜித் ஏன் இப்படி பாதியிலேயே ஊர் சுற்றக் கிளப்பிவிட்டார் எனப் பலரும் குழம்பி இருக்கிறார்கள். படத்தின் தயாரிப்பாளரோ  'மதுரை’ அன்புவிடம்  ஃபைனான்ஸ் வாங்கித்தான் படப்பிடிப்பை நடத்தி வருகிறார். ஒவ்வொரு ஷெட்யூல் தொடங்கப்படும் போது கொஞ்சம் கொஞ்சமாகவே பணத்தை ரீலீஸ் செய்கிறாராம் அன்பு. சமீபத்தில் நடந்த ஐடி ரெய்டு அன்புவை கலங்கடித்துவிட்டதாம். அதனாலேயே இந்த முடிவுக்கு வந்திருக்கிறாராம் அன்பு. நிலைமை இப்படி இருக்க படத்தின் டைட்டிலை அதிரடியாக அறிவிக்கத் திட்டமிட்டிருக்கிறதாம் படக்குழு.  

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in