
விக்ரம் நடித்துள்ள ’கோப்ரா’ படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று அதன் இயக்குநர் அஜய் ஞானமுத்து தெரிவித்துள்ளார்.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம் 'கோப்ரா'. இதில் விக்ரம் பல கெட்டப்களில் நடித்துள்ளார். ’கே.ஜி.எப்’ ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ்.ரவிகுமார், மியா ஜார்ஜ், பத்மப்பிரியா, கனிகா, மிருணாளினி ரவி உட்பட பலர் இதில் நடித்துள்ளனர். முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், இந்தப் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் சார்பில் எஸ்.எஸ்.லலித்குமார் தயாரிக்கிறார்.
இந்தப் படத்தின் ஷூட்டிங் கடந்த சில நாட்களுக்கு முன் முடிவடைந்துவிட்டது. இந்நிலையில், இந்தப் படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். சமூக வலைதளத்தில் ரசிகர் ஒருவர் இந்தப் படம் எப்போது வெளியாகும்? என்று கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்துள்ள இயக்குநர் அஜய் ஞானமுத்து, மே 26 ஆம் தேதி படத்தை வெளியிட திட்டமிடுவதாகவும் இன்னும் 3 மாதம் இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.