அஜித்தின் ’விஸ்வாசம்’ படத்தை மறுத்த இந்தி ஹீரோக்கள்

இந்தி ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்களாம்!
அஜித், நயன்தாரா
அஜித், நயன்தாரா

அஜித் நடித்து சூப்பர் ஹிட்டான ’விஸ்வாசம்’ படத்தில் நடிக்க இந்தி ஹீரோக்கள் மறுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அஜித், நயன்தாரா, ஜெகபதிபாபு, விவேக், அனிகா உட்பட பலர் நடித்து சூப்பர் ஹிட்டான படம், ’விஸ்வாசம்’. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்த இந்தப் படத்துக்கு இமான் இசை அமைத்திருந்தார். இதன் பாடல்கள் வரவேற்பை பெற்றிருந்தன. சிவா இயக்கி இருந்தார். இந்தப் படத்தின் இந்தி ரீமேக் உரிமையை, தயாரிப்பாளர் மனீஷ் ஷா என்பவர் ரூ.4 கோடிக்கு பெற்றிருந்தார்.

அக்‌ஷய்குமார், அஜய் தேவ்கன்
அக்‌ஷய்குமார், அஜய் தேவ்கன்

இதில், அஜித் கேரக்டரில் நடிக்க முதலில், பாலிவுட் ஹீரோ அஜய் தேவ்கனை நாடினார். அவர் அடுத்தடுத்து படங்களில் நடிக்க இருப்பதால் மறுத்துவிட்டார். அடுத்து அக்‌ஷய் குமாரிடம் கேட்டார். அவரும் மறுத்துவிட்டார். அதற்கு அவர்கள் வெவ்வேறு காரணங்களை சொன்னாலும், இந்தி ரசிகர்கள் இந்தப் படத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று அவர் நம்புவதுதான் மறுத்ததற்கு காரணம் என்கிறார்கள்.

மனிஷ் ஷா, ஏக்தா கபூருடன் இணைந்து அவர் இந்த ரீமேக்கை தயாரிக்க திட்டமிட்டார். பெரிய ஹீரோக்கள் நடிக்காததால், அவர் இணைந்து தயாரிக்க மறுத்துவிட்டார். இதனால், படத்தைத் தயாரித்த சத்ய ஜோதி பிலிம்ஸுடன் இணைந்து தயாரிக்கலாமா என்பது பற்றி அவர் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in