'கைதி' இந்தி ரீமேக் படப்பிடிப்பு தொடக்கம்

நடிகர்கள் கார்த்தி, அஜய்தேவ்கன்
நடிகர்கள் கார்த்தி, அஜய்தேவ்கன்

கார்த்தி நடித்த ’கைதி’ படத்தின் இந்தி ரீமேக் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது.

கார்த்தி, நரேன், அர்ஜுன் தாஸ், ஜார்ஜ் மரியான், தீனா, ரமணா, ஹரீஷ் உத்தமன் உள்பட பலர் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான படம், 'கைதி'. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்தப் படத்துக்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்திருந்தார். சாம் சி.எஸ் இசையமைத்திருந்தார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு இந்தப் படத்தைத் தயாரித்திருந்தார்.

பூஜை
பூஜை

ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தின் ரீமேக் உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவியது. ஆனால், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தங்கள் நிறுவனமே அனைத்து மொழிகளிலும் படத்தைத் தயாரிக்கும் என்று அறிவித்தார். ஆனால் இந்தப் படத்தின் இந்தி ரீமேக் உரிமையை, பாலிவுட் ஹீரோ அஜய்தேவ்கன் பெற்றிருந்தார். அவரே கார்த்தி நடித்த கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், கைதி இந்தி ரீமேக் படப்பிடிப்பு மும்பையில் நேற்று தொடங்கியது. படத்தை தர்மேந்திரா ஷர்மா இயக்கி வருகிறார். பிரபல எடிட்டரான இவர், அஜய்தேவ்கனின் உறவினர். அஜய் தேவ்கன் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தி ரீமேக்கை தயாரிக்கிறது. படத்துக்கு போலா (Bholaa) என்று தலைப்பு வைத்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in