ஐஸ்வர்யா ரஜினியின் ‘பயணி’ இன்று வெளியாகிறது

ஐஸ்வர்யா ரஜினியின் ‘பயணி’ இன்று வெளியாகிறது

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள வீடியோ ஆல்பமான ’பயணி’ இன்று வெளியாகிறது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனுஷ் நடிப்பில் `3' என்ற படத்தை இயக்கினார். அடுத்து, `வை ராஜா வை' படத்தை இயக்கினார். இப்போது ’முசாபிர்’ என்ற இசை ஆல்பத்தை உருவாக்கி உள்ளார். இந்த ஆல்பம், பான் இந்தியா முறையில் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழில், `பயணி' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஜானி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார்.

இந்த ஆல்பத்தை முதலில், காதலர் தினத்தன்று வெளியிட முடிவு செய்திருந்தனர். ஐஸ்வர்யா, கரோனாவால் பாதிக்கப்பட்டதால், மகளிர் தினமான மார்ச் 8-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அப்போதும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இந்த ஆல்பம் இன்று மாலை 4.44 மணிக்கு வெளியாகிறது.

இதுபற்றி குறிப்பிட்டுள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த், 9 வருட இடைவெளிக்குப் பின் நான் இயக்கியுள்ள ’பயணி’ இசை ஆல்பம் வெளியாகிறது. உங்கள் வாழ்த்துகள் தேவை'' என்று கூறியுள்ளார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in