ராகவா லாரன்ஸ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
ராகவா லாரன்ஸ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

லாரன்ஸ் படத்தை இயக்குகிறாரா ஐஸ்வர்யா ரஜினி?

ராகவா லாரன்ஸ் இயக்கும் படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

தற்போது முசாபிர் இசை ஆல்பத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உருவாக்கி வருகிறார். கடந்த மாதமே இந்த ஆல்பம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கரோனா தொற்றால் ஐஸ்வர்யா பாதிக்கப்பட்டதால் தள்ளிப்போனது.

ராகவா லாரன்ஸ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
ராகவா லாரன்ஸ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

இந்நிலையில் நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸை, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நேரில் சந்தித்துள்ளார். அவர் ’முசாபிர்’ ஆல்பம் பற்றி அவரிடம் விளக்கியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் ஐஸ்வர்யா பகிர்ந்துள்ளார்.

இது குறித்து கூறியுள்ள அவர், ``சுவாரஸ்யமான ஒன்று உருவாகிறது. அன்புக்குரிய அண்ணனை சந்தித்த பிறகு மூளை இன்னும் வேகமாக செயல்படுகிறது'' என்று தெரிவித்துள்ளார்.

ராகவா லாரன்ஸ் நடிக்கும் ’துர்கா’ படத்தை ஸ்டண்ட் இயக்குநர்கள் அன்பறிவ் இயக்குவதாக இருந்தது. அவர்கள் திடீரென விலகியதை அடுத்து, அதை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கலாம் என்று கோடம்பாக்கத்தில் செய்தி வெளியாகி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in