பிரபல கிரிக்கெட் வீரரின் படத்தை இயக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்?

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

பிரபல கிரிக்கெட் வீரரின் படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது ‘லால் சலாம்’ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதில் விஷ்ணு விஷால், விக்ராந்த், சிறப்புத் தோற்றத்தில் ரஜினிகாந்த் உள்ளிட்டப் பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தை அடுத்து அவர் இயக்க இருக்கும் புதுப் படம் குறித்தான தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில், பிரபல கிரிக்கெட் வீரரான கங்குலியின் பயோபிக் எடுக்க இருக்கிறார் ஐஸ்வர்யா.

கடந்த 2021-ம் ஆண்டு தனது வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க இருப்பதை தெரிவித்து இருந்தார் கங்குலி. இதை ஐஸ்வர்யா இயக்குவார் எனவும், பிரபல பாலிவுட் தயாரிப்பாளரான லவ் ரஞ்சன் தயாரிக்கிறார் எனவும் சொல்லப்படுகிறது. ரன்பீர் கபூர் கங்குலி வேடத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in