ஐஸ்வர்யா ராஜேஷின் `டிரைவர் ஜமுனா' கதை இதுதான்!

ஐஸ்வர்யா ராஜேஷின் `டிரைவர் ஜமுனா' கதை இதுதான்!

ஐஸ்வர்யா ராஜேஷ், முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் 'டிரைவர் ஜமுனா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது.

‘வத்திக்குச்சி’ இயக்குநர் பா. கின்ஸ்லின் இயக்கியுள்ள படம், 'டிரைவர் ஜமுனா'. இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடிக்கிறார். இவருடன் 'ஆடுகளம்', நரேன், ஸ்ரீ ரஞ்சனி, அபிஷேக், பாண்டியன், கவிதா பாரதி, பாண்டி உள்பட பலர் நடிக்கின்றனர். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். படத்தை 18 ரீல்ஸ் சார்பில், பிரபல குழந்தைகள் நல மருத்துவரும், தயாரிப்பாளருமான எஸ்.பி.சவுத்ரி தயாரிக்கிறார்.

படம் பற்றி இயக்குநர் கின்ஸ்லின் கூறும்போது, ''இன்றைய சூழலில் பெண்களும் கால் டாக்ஸி டிரைவர்களாக பணியாற்றுகிறார்கள். பெண் டிரைவரின் ஒருநாள், ஒரு டிரிப்பை மையப் படுத்திய திரைக்கதைதான் ‘டிரைவர் ஜமுனா’. வாடகை கார் இயக்கும் பெண் ஓட்டுநர்களை நேரில் சந்தித்து, அவர்களிடமிருந் து உடல் மொழியையும், வாடிக்கையாளர்களின் மனநிலையையும் கேட்டறிந்த பின் ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த கேரக்டரில் நடித்தார். பொதுவாக சாலை பயணம் பற்றிய திரைப்படம் என்றால் ப்ளூமேட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்குவார்கள். ஆனால் இதில் ஐஸ்வர்யா ராஜேஷ், டூப் போடாமல் நடித்திருக்கிறார் '' என்றார்.

இந்நிலையில், இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளிலும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.