`தலைவர் 169’ படத்தில் உறுதியானது ரஜினி ஜோடி!

`தலைவர் 169’ படத்தில் உறுதியானது ரஜினி ஜோடி!

நடிகர் ரஜினிகாந்த் நடித்த ’அண்ணாத்த’ படம் கடந்த நவம்பர் மாதம் வெளியானது. சிவா இயக்கிய இந்தப் படத்தில், குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா உட்பட பலர் நடித்திருந்தனர். டி.இமான் இசை அமைத்திருந்தார். சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படம், ரஜினிகாந்தின் 168-வது படம் ஆகும். இதையடுத்து அவரின் 169-வது படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

’தலைவர் 169’ என தற்காலிகத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். அனிருத் இசை அமைக்கிறார். ஷூட்டிங் ஆகஸ்ட் மாதம் தொடங்குகிறது. இவர்களுடன் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாரும் இந்தப் படத்தில் ரஜினியுடன் முக்கிய கேரக்டரில் நடிக்க இருக்கிறார்.

இதில் ரஜினி ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. இப்போது அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் இருவரும் கணவன் மனைவியாக நடிக்கின்றனர்.

நடிகை ஐஸ்வர்யா ராய், ’எந்திரன்’ படத்தில் ரஜினி ஜோடியாக நடித்திருந்தார். அந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. இப்போது இருவரும் இந்தப் படத்தில் மீண்டும் இணைகின்றனர்.

நடிகை ரம்யா கிருஷ்ணன், இதில் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே ’படையப்பா’ படத்தில் நீலாம்பரி கேரக்டரில் ரஜினிக்கு வில்லியாக அவர் நடித்திருந்தார். அந்த கேரக்டர் பரபரப்பாகப் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in