அர்ஜுன்தாஸை காதலிக்கிறாரா நடிகை ஐஷ்வர்யா லட்சுமி?- வைரல் புகைப்படத்தால் ரசிகர்கள் கேள்வி

அர்ஜுன்தாஸை காதலிக்கிறாரா நடிகை ஐஷ்வர்யா லட்சுமி?- வைரல் புகைப்படத்தால் ரசிகர்கள் கேள்வி

’ஜகமே தந்திரம்’ படம் மூலமாக தமிழில் அறிமுகமானவர் நடிகை ஐஷ்வர்யா லட்சுமி. ‘பொன்னியின் செல்வன்’, ‘கட்டா குஸ்தி’ ஆகிய படங்கள் மூலம் தமிழில் நடிப்பால் கவனம் ஈர்த்தார். நேற்று மாலை ஐஷ்வர்யா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் அர்ஜுன்தாஸூடன் இருக்கும்படியான புகைப்படத்தை ஹார்ட் எமோஜியுடன் பகிர்ந்திருக்கிறார். இதனை அடுத்து இருவரும் காதலித்து வருகிறார்களா என ரசிகர்கள் கமென்ட்டில் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இன்னொரு பக்கம் புதுப்படத்தின் புரோமோஷனுக்காக இப்படி புகைப்படத்தைப் பகிர்ந்திருக்கிறார்களா எனவும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஆனால், இதுகுறித்து அர்ஜுன்தாஸோ, ஐஷ்வர்யா லட்சுமியோ இன்னும் தெளிவுப்படுத்தவில்லை. ’கைதி’, ‘அந்தகாரம்’, ‘மாஸ்டர்’ படம் மூலமும் தன்னுடைய தனித்துவமான குரல் மூலமாகவும் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டவர் நடிகர் அர்ஜுன்தாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in