ஐஸ்வர்யா லட்சுமி
ஐஸ்வர்யா லட்சுமி

சாய் பல்லவி படத்தைத் தயாரிக்கும் பிரபல ஹீரோயின்

பிரபல நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, சாய் பல்லவி நடிக்கும் படத்தைத் தயாரிக்கிறார்.

தமிழில் விஷாலில் ஆக்‌ஷன், தனுஷின் ஜகமே தந்திரம் படங்களில் நடித்திருப்பவர் மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. இப்போது மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ள இவர், இப்போது விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இவர் தயாரிப்பாளராக மாறியிருக்கிறார். சாய் பல்லவி நடிக்கும் கார்கி படத்தை இவர் இணை தயாரிப்பு செய்கிறார். சாய் பல்லவியின் பிறந்த நாளை முன்னிட்டு இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக்கும் முன்னோட்ட வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.

’ரிச்சி’ படத்தை இயக்கிய கவுதம் ராமச்சந்திரன் இயக்கும் இந்தப் படத்துக்கு கோவிந்த் வசந்தா இசை அமைக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் இந்தப் படம் வெளியாகிறது. அந்தந்த மொழிகளின் டப்பிங்கையும் சாய் பல்லவியே பேசியுள்ளார்.

இதன் படப்பிடிப்பு வீடியோவை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, ``இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சாய் பல்லவி. கார்கி படத்தில் உங்களுடன் பணியாற்றியதில் பெருமைபடுகிறேன். இயக்குநர் கவுதம் ராமச்சந்திரன் சிறந்த இயக்குநர். அவரை நண்பர் என்றழைப்பதில் பெருமிதம் கொள்கிறேன். படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவரும் ஈடு செய்ய முடியாதவர்கள். விரைவில் படம் வெளிவரும். அது உங்களிடம் பேசும்'' என்று தெரிவித்துள்ளார்.

x
காமதேனு
kamadenu.hindutamil.in