மேடையில் கண்ணீர் விட்ட பிரபல நடிகை: சாய் பல்லவி ஆறுதல்

மேடையில் கண்ணீர் விட்ட பிரபல நடிகை: சாய் பல்லவி ஆறுதல்

பிரபல நடிகை மேடையில் கண்ணீர் விட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிவின் பாலி நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ’ரிச்சி’ படத்தை இயக்கியவர் கெளதம் ராமச்சந்திரன். இவர் இப்போது இயக்கியுள்ள படம், ’கார்கி’. இதில் சாய் பல்லவி நாயகியாக நடித்துள்ளார். இந்தப்படம் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் தயாராகி உள்ளது. காளி வெங்கட் உட்பட பலர் நடித்துள்ளனர். நடிகை ஐஸ்வர்யா லட்சுமி இதில் இணை தயாரிப்பு செய்துள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

ஐஸ்வர்யா லட்சுமி, காளி வெங்கட், சாய் பல்லவி, கெளதம் ராமச்சந்திரன், ராஜசேகர பாண்டியன்
ஐஸ்வர்யா லட்சுமி, காளி வெங்கட், சாய் பல்லவி, கெளதம் ராமச்சந்திரன், ராஜசேகர பாண்டியன்

இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் இன்று நடந்தது. இதில் பேச வந்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, மைக்கைப் பிடித்தபடி திடீரென்று கண்ணீர் விட்டு அழுதார். உடனடியாக அங்கு ஓடி வந்த நடிகை சாய் பல்லவி அவரைத் தேற்றி, இது ஆனந்த கண்ணீர்தான் என்றார். ’’இந்தப் படம் தொடங்கி 3 வருடம் ஆகிவிட்டது. ஸ்கிரிப்ட் எழுதப்பட்ட காலத்தில் இருந்தே ஐஸ்வர்யா லட்சுமி இந்தப் படத்தோடு பயணித்துக் கொண்டிருக்கிறார். அதனால் எமோஷனாகிவிட்டார்’’ என்றார்.

உடனடியாக வந்த இயக்குநர் கெளதம் ராமச்சந்திரன், ‘இந்தப் படம் தொடங்கி தாமதமானதால், என்ன செய்யலாம் என்று கவலையில் இருந்தேன். அந்த நேரத்தில் சில நண்பர்கள் எனக்கு உதவி செய்தார்கள். அதில் முதலில் உதவியது ஐஸ்வர்யா லட்சுமிதான். அவங்க இல்லைனா, இந்தப் படத்தை தொடங்கி முடிச்சிருக்க மாட்டேன். அப்பதான் அவர் மூணு படங்கள் நடிச்சிருந்தாங்க. அதில் கிடைத்த மொத்த சேமிப்பையும், இந்தப் படத்துக்காக, கதைக்காகக் கொடுத்தார். வேற யாரும் அப்படி கொடுத்திருப்பாங்களான்னு எனக்கு தெரியாது. நன்றி ஐஸ்வர்யா லட்சுமி’’ என்றார்.

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, தமிழில் ஆக்‌ஷன், ஜகமே தந்திரம் படங்களில் நடித்துள்ளார். இப்போது பொன்னியின் செல்வன், கேப்டன் படங்களில் நடித்திருக்கிறார். அவர் மேடையில் திடீரென்று கண்ணீர் விட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in