அப்பா ரஜினியின் சென்டிமென்ட்டை பின்தொடரும் ஐஸ்வர்யா!

’லால் சலாம்’
’லால் சலாம்’ அப்பா ரஜினியின் சென்டிமென்ட்டை பின்தொடரும் ஐஸ்வர்யா!

அப்பா ரஜினியின் ஹிட் சென்டிமென்ட்டை ஐஸ்வர்யாவும் பின் தொடர்ந்திருக்கிறார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது விஷ்ணுவிஷால், விக்ராந்த் நடிப்பில் ‘லால் சலாம்’ படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு இதன் படப்பூஜை போடப்பட்டு படம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதில் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். இதன் படப்பிடிப்பை ஹோலி பண்டிகை அன்று விழுப்பும் மாவட்டம் செஞ்சியில் ஐஸ்வர்யா தொடங்கி இருக்கிறார்.

படக்குழுவினருடன் ஹோலி கொண்டாடும்படியான புகைப்படத்தைப் பகிர்ந்து ஐஸ்வர்யா கூறியிருப்பதாவது, ‘படப்பிடிப்பின் முதல் நாளிலேயே 16 மணி நேரம் படப்பிடிப்பு நடத்தினோம். அதன் பிறகே இந்த நாளை கொண்டாடுவது என்ற முடிவுக்கு வந்தோம். ஹோலி பண்டிகை எப்போதுமே என் மனதுக்கு நெருக்கமானது. கே.பாலச்சந்தர் தாத்தாவை நினைத்துக் கொள்வேன். மேலும், இது எனக்கு ‘ரஜினிகாந்த் நாள்’. பெளர்ணமி, ஹோலி, ரஜினிகாந்த் என பெயர் சூட்டப்பட்ட நாள் என இத்தனை பாசிட்டிவான விஷயங்கள் நிரம்பிய நாளில் என் படப்பிடிப்பைத் தொடங்குவதில் மகிழ்ச்சி’ எனக் கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in