மீண்டும் படம் இயக்கும் ஐஸ்வர்யா தனுஷ்

மீண்டும் படம் இயக்கும் ஐஸ்வர்யா தனுஷ்

மீண்டும் படம் இயக்கும் ஐஸ்வர்யா தனுஷ்

தனுஷ், ஸ்ருதிஹாசனை வைத்து ‘3’ படம் இயக்கியதன் மூலம் இயக்குநராகக் கவனம் ஈர்த்த ரஜினிகாந்த்தின் முதல் மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ், அடுத்ததாக கௌதம் கார்த்திக்கை வைத்து 'வை ராஜா வை' என்ற படத்தை இயக்கினார்.

இந்த இரண்டு படங்களும் பிறகு நீண்ட இடைவெளி எடுத்துக்கொண்ட ஐஸ்வர்யா தனுஷ், தற்போது புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படத்தைப் பிரபல நிறுவனமான லைக்கா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுஆள்ளது. இந்த படத்தின் கதையைச் சஞ்சீவி என்பவர் எழுதி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை லைக்கா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் தயாராகவிருக்கும் இத்திரைப்படத்தின் முதற்கட்ட ஆயத்த பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பை வெளியிடவும், விரைவில் படப்பிடிப்பைத் துவங்கவும் ஐஸ்வர்யா தனுஷ் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.