
அர்ஜூன் மகள் ஐஸ்வர்யா - ரம்பி ராமையா மகன் உமாபதி ஆகியோருக்கு திருமண நிச்சயதார்த்தம் இன்று விமரிசையாக நடைபெற்றது.
ஆக்ஷன் கிங் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா. ’பட்டத்து யானை’, ’சொல்லிவிடவா’ உள்ளிட்ட ஒரு சில படங்களில் இவர் நடித்துள்ளார். நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக வலம்வரும் ரம்பி ராமையாவின் மகன் உமாபதி. இவர் ’அதாகப்பட்டது மகாஜனங்களே’, ’மணியார் குடும்பம்’, ’தண்ணி வண்டி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
அர்ஜூன் தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சியின் வாயிலாக உமாபதி - ஐஸ்வர்யா நட்பு உருவானது. இருவரின் நட்பும் அடுத்தக்கட்டமாக காதலாக மாறியது. சில வருடங்கள் காதலை தொடர்ந்த இந்த இளம்ஜோடி வாழ்க்கையில் இணைவதற்கு, பெற்றோரின் அனுமதி மற்றும் ஆசிர்வாதம் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து அடுத்தாண்டு ஜனவரியில் உமாபதி - ஐஸ்வர்யா திருமணம் நடைபெற இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த திருமண ஏற்பாட்டிற்கான நிச்சயதார்த்தம் இன்று விமரிசையாக நடைபெற்றது. இருவீட்டு பெரியவர்கள் மற்றும் நெருங்கிய உற்றார் உறவினர் நிச்சயதார்த்த வைபவத்தில் பங்கேற்றனர்.
சென்னையிலுள்ள தனியார் ஹோட்டல் மற்றும் அர்ஜூன் கட்டியுள்ள ஆஞ்சநேயர் கோயில் ஆகிய இடங்களில் நிச்சயதார்த்த நிகழ்வுகள் நடைபெற்றன. உமாபதி - ஐஸ்வர்யா ஜோடி ஒரே நிறத்தில் ஆடை அணிகலன் உடுத்தியிருந்ததும், அர்ஜூன் - தம்பி ராமையா உள்ளிட்டோர் உற்சாகமாக பங்கெடுத்ததுமாக, நிச்சயதார்த்த விழாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இதையும் வாசிக்கலாமே...
வில்வித்தை போட்டியில் கை இல்லாத இந்திய வீராங்கனை ஷீத்தல் தங்கம் வென்று சாதனை
நீட் விலக்கு மசோதா... நேரடியாக குடியரசுத் தலைவரிடமே முதல்வர் வலியுறுத்தல்!
3 அடி உயரம்... 250 கிலோ எடை... ரஜினிக்கு சிலை அமைத்து குடும்பத்துடன் வழிபடும் ரசிகர்!
5 வருடமாக படுத்தப் படுக்கையாக இருக்கும் பிரபல இயக்குநரின் மனைவி... கண்டுகொள்ளாத திரையுலகம்!
நவம்பர் மாதம் 14 நாட்கள் வங்கி விடுமுறை... பணிகளை முன்பே திட்டமிடுங்க!