ரிலீஸாகும் முன்பே இணையத்தில் வெளியானது அவதார்2: படக்குழு அதிர்ச்சி

ரிலீஸாகும் முன்பே இணையத்தில் வெளியானது அவதார்2: படக்குழு அதிர்ச்சி

`அவதார்2' படம் வெளியாகும் முன்பே இணையத்தில் வெளியாகி படக்குழுவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் அவதார் தி வே ஆஃப் வாட்டர். அதிக பொருட் செலவில் உருவாகியுள்ள இந்த படம் உலகம் முழுவதும் 52 ஆயிரம் திரையரங்குகளில் இன்று வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் படத்தை வெளியிட விநியோக நிறுவனத்துடன் சில திரையரங்குகள் உடன்பாடு செய்த நிலையில் சென்னையிலும் படம் வெளியாகியுள்ளது.

இந்த அவதார் முதல் பாகம் கடந்த 2009-ம் ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற நிலையில் இரண்டாம் பாகத்தை பலரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். முதல் பாகம் வசூலில் சாதித்ததோடு, சிறந்த ஒளிப்பதிவு, விஷூவல் எபெக்ட்ஸ், கலை அமைப்பு ஆகிய 3 பிரிவுகளில் ஆஸ்கார் விருதுகளை வென்று சாதனை படைத்தது.

தற்போது, 13 ஆண்டுகள் கழித்து வெளியாகியுள்ள அவதார்2 ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி இருக்கிறது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியான அவதார்2 படம் இணையத்தில் ஏற்கெனவே வெளியாகியிருந்தது படக்குழுவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதனால் பலரும் படத்தை ரிலீஸ் வரை காத்திருக்காமல் இலவசமாக டவுன்லோடு செய்து வருகிறார்களாலாம். 2 ஆயிரம் கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்தப் படம் இலவசமாகப் பார்க்கப்படுகிறது. அவதாரின் முதல் பாகமும் பைரசியால் ஆட்கொள்ளப்பட்டது.

அவதார்2 படம் இணையத்தில் திருட்டு தனமாக பார்ப்பதால் திரையுலக பிரமுகர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். "அவதார்2 படம் திரையரங்குக்கு சென்று பார்க்க வேண்டிய படம் என்றும், பல கோடிகளை செலவு செய்து எடுத்தால் திருட்டு தனமாக படம் வெளியானது சரியில்லை என்றும் கமென்ட் செய்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in