`ஜென்டில்மேன் 2' படத்தின் இயக்குநர் இவர்தான்!

கே.டி.குஞ்சுமோன், கோகுல் கிருஷ்ணா
கே.டி.குஞ்சுமோன், கோகுல் கிருஷ்ணா

’ஜென்டில்மேன் 2' படத்தின் இயக்குநரை தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் இன்று அறிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட படங்கள் தயாரிப்பதிலும் அதைப் பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்துவதிலும் புகழ்பெற்றவர் கே.டி.குஞ்சுமோன். சரத்குமார், இயக்குநர் ஷங்கர் உட்பட பலரை உருவாக்கியவர் அவர். வசந்தகால பறவை, சூரியன், ஜென்டில்மேன், காதலன், காதல் தேசம், ரட்சகன் உட்பட பல படங்களை தயாரித்த அவர், என்றென்றும் காதல் என்ற படத்தை கடந்த 1999-ம் ஆண்டு தயாரித்தார். பிறகு படங்கள் தயாரிக்கவில்லை.

பிரியா லால்
பிரியா லால்

இந்நிலையில், ’ஜென்டில்மேன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை அவர் தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளார். இந்தப் படத்தில் நயன்தாரா சக்கரவர்த்தியும் பிரியா லாலும் நாயகிகளாக நடிக்கின்றனர். மரகதமணி இசை அமைக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள், டெக்னீஷியன்கள் அறிவிக்கப்படவில்லை. இதற்கிடையே இந்தப் படத்தின் இயக்குநரை இன்று மாலை அறிவிக்க இருப்பதாக படக்குழு தெரிவித்திருந்தது.

அதன்படி, இந்தப் படத்தை ஏ.கோகுல் கிருஷ்ணா இயக்க இருப்பதாக அறிவித்துள்ளனர். இவர், நானி நடித்த ஆஹா கல்யாணம் என்ற படத்தை இயக்கியவர். டைரக்டர் விஷ்ணுவர்தனிடம் பில்லா, அறிந்தும் அறியாமலும், சர்வம், பட்டியல் படங்களில் இணை மற்றும் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். படத்தின் ஹீரோ மற்றும் தொழி்நுட்ப கலைஞர்களின் விவரங்களை விரைவில் எதிர்பார்க்கலாம் என்று கே.டி.குஞ்சுமோன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in