அருண் விஜய்யின் ’அக்னிச் சிறகுகள்’ ரிலீஸ் எப்போது?

அருண் விஜய்யின் ’அக்னிச் சிறகுகள்’ ரிலீஸ் எப்போது?

அருண் விஜய், விஜய் ஆண்டனி நடித்துள்ள ’அக்னிச் சிறகுகள்’ படம் எப்போது வெளியாகும் என்று அதன் தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா சொன்னார்.

'மூடர் கூடம்' நவீன் இயக்கியுள்ள படம், 'அக்னிச் சிறகுகள்'. இதில், அருண் விஜய், விஜய் ஆண்டனி ஹீரோக்களாக நடித்துள்ளனர். மற்றும் அக்‌ஷரா ஹாசன், இந்தி நடிகை ரைமா சென், பிரகாஷ்ராஜ், நாசர், தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே, சென்றாயன் உள்பட பலர் கேரக்டர்களில் நடித்துள்ளனர். கே.ஏ.பாட்சா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு நடராஜன் சங்கரன் இசையமைத்துள்ளார்.

அக்னிச் சிறகுகள் - விஜய் ஆண்டனி, அக்‌ஷரா ஹாசன்
அக்னிச் சிறகுகள் - விஜய் ஆண்டனி, அக்‌ஷரா ஹாசன்

அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரித்துள்ள இந்தப் படத்தின் ஷூட்டிங், கரோனாவுக்கு முன்பு, கஜகஸ்தானில் 43 நாட்கள் நடைபெற்றது. பிறகு கொல்கத்தாவில் நடந்தது. இப்போது படம் முடிந்துவிட்டது. படத்தைப் பார்த்த தமிழ் சினிமா பிரபலங்கள் பலர், தமிழ் சினிமாவுக்கு ’அக்னிச் சிறகுகள்’ வேறொரு உலகத்தைக் காட்டும் என்று தெரிவித்துள்ளனர்.

’’மூன்றாம் பிறை படத்தின் ஆக்‌ஷன் வடிவமாக, இந்தப் படம் இருக்கும்’’ என்று தெரிவித்துள்ள படக்குழு புரமோஷன் வேலைகளைத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் படம் எப்போது வெளியாகும் என்று தயாரிப்பாளர் டி.சிவாவிடம் கேட்டபோது, ’ஜூன் மாதம் வெளியிட முயன்று வருகிறோம்’ என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.