'ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாஸ ஆத்ரேயா' : தமிழ் ரீமேக் தலைப்பு

 ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ - சந்தானம்
‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ - சந்தானம்

2019-ம் ஆண்டு தெலுங்கில் ஸ்வரூப் ஆர்எஸ்ஜே இயக்கத்தில், நவீன் பொலிஷெட்டி நடிப்பில் வெளிவந்து மிகப்பெரும் வெற்றியடைந்த திரைப்படம் 'ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாஸ ஆத்ரேயா'. தெலுங்கு மொழியைத்தாண்டி இந்தியாவில் பலமொழி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

இத்திரைப்படம் சந்தானம் நடிப்பில் தமிழில் ரீமேக் செய்யப்படும் என்று கடந்த ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டது. தற்போது இத்திரைப்படத்துக்கான தமிழ் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் மனோஜ் பீடா இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்துக்கு ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ஊர்வசி, முனீஷ்காந்த், குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in