சந்தானம் நடித்துள்ள ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ படத்தில் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சந்தானம் நடித்துள்ள ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ படத்தில் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சந்தானம் நடித்துள்ள ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ திரைப்படம் நவம்பர் 25ம் தேதி வெளியாகவுள்ளது.

மனோஜ் பீதா இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ திரைப்படம் வரும் நவம்பர் மாதம் 25ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 'ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா' படத்தின் தமிழ் ரீமேக்காகும்

இப்படத்தில் சந்தானத்துடன் ரியா சுமன், ஸ்ருதி ஹரிகரன், குக் வித் கோமாளி புகழ், ரெடிங் கிங்ஸ்லி, முனீஷ்காந்த் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இந்த நிலையில் இன்று படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in