‘வயது கூடும்போது வந்துவிடுகிறது பக்குவம்’ - தத்துவம் பேசும் சமந்தா

‘வயது கூடும்போது வந்துவிடுகிறது பக்குவம்’ - தத்துவம் பேசும் சமந்தா

'இன்ஸ்டாகிராம் சென்சேஷன்' என ரசிகர்களால் கொண்டாடப்படும் சமந்தா தனது நிறம், உருவம், அவற்றின் மீதான நம்பிக்கை, கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுக்கும் விதம் பற்றி மனம் திறந்திருக்கிறார்.

‘காத்துவாக்குல ரெண்டு காதல்' திரைப்படத்துக்குக் கிடைத்த வரவேற்பால் உற்சாகமாக இருக்கும் சமந்தா, தெலுங்கில் ‘யசோதா', விஜய் தேவரகொண்டாவுடன் ஒரு படம், ஹாலிவுட் படம் என பிஸியாக இருக்கிறார். இன்ஸ்டாகிராமில் 23 மில்லியனுக்கும் அதிகமானோர் அவரைப் பின்தொடர்கிறார்கள். ஃபோட்டோஷூட், ரீல்ஸ் என அங்கு எப்போதும் சமந்தாதான் இளைஞர்களின் சென்சேஷன்.

தனது திரையுலக வாழ்க்கை குறித்தும் சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருப்பது குறித்தும் சமந்தா அவ்வப்போது கருத்து தெரிவிப்பது உண்டு. ‘படங்களின் கதாபாத்திரங்களில் அந்த கதாபாத்திரமாக மட்டுமே தெரிவேன். சமூகவலைதள பக்கங்கள் மூலமாக சமந்தா என்பது யார் என ரசிகர்களுக்கு தெரிய வேண்டும் என்பதுதான் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்க காரணம்’ என முன்னொரு பேட்டியில் சமந்தா சொல்லியிருக்கிறார்.

இந்நிலையில், சமீபத்தில் ஆங்கில இதழ் ஒன்றுக்குப் பேட்டி கொடுத்திருக்கிறார் சமந்தா.

அதில், 'ஒரு நடிகையாக சிறந்த கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுப்பது எனக்குச் சவாலான ஒரு விஷயம். நீங்கள் திரையில் ஜொலிப்பதற்கும் மக்கள் உங்களை ஞாபகம் வைத்திருப்பதற்கும் அந்தக் கதாபாத்திரங்களே உதவுகின்றன. அந்த வகையில் எனக்குக் கிடைத்த நல்ல வாய்ப்புகளைச் சரியான முறையில் பயன்படுத்தி கொண்டேன் என்பதில் மகிழ்ச்சி. நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் நான் அடுத்த உயரத்திற்குப் போக வேண்டும். அதை நிலையாக, சரியாக எடுத்து செல்ல வேண்டும். 'Slow and Stead' என்பதை 'Consistency and Confidence' என்று மாற்ற வேண்டும்' என்று கூறியுள்ளார் சமந்தா.

மேலும், 'நிறைய படங்களில் நடித்திருக்கிறேன். இப்போது இன்னும் நம்பிக்கையுடன் உள்ளேன். இதற்குக் காரணம் எனக்கு வயதாகிறது. அதற்கான பக்குவமும் வந்திருக்கிறது. என்னுடைய உடல் நிறத்திலும் உடல்வாகிலும் நம்பிக்கையைப் பெறுவதற்கு எனக்குச் சிறிது காலம் தேவைப்பட்டது.

இப்போது கவர்ச்சியான கதாபாத்திரமாக இருந்தாலும் சரி, கடினமான ஆக்‌ஷன் காட்சிகளானாலும் சரி தைரியமாகச் செய்வேன். ஆனால், இது போல நான் கடந்த காலத்தில் இல்லை என்பதுதான் உண்மை' என அந்தப் பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார்.

கூடவே, சமந்தாவின் கவர்ச்சிகரமான படங்களும் அந்த ஆங்கில இதழில் வெளியாகியிருக்கின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in